அகதிகளாக தஞ்சம் அடைய வந்து மெக்சிகோ எல்லையில் பிடிப்பட்ட 50 சீக்கியர்களிடம் தலைப்பாகையை அகற்றி, பறிமுதல் செய்த விவகாரத்தில் அமெரிக்க அரசு விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவில் தஞ்சம்தேடி சென்ற ஜூன் மாதம் அகதிகளாகவந்த சீக்கியர்கள் 50 பேரை மெக்சிகோ எல்லையிலுள்ள யூமா பகுதியில் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புபடையினர் பிடித்தனர். அப்போது அவர்களின் தலைப்பாகைகளை பாதுகாப்பு படையினர் அகற்ற கூறியதாகவும், அதை பறிமுதல் செய்ததாகவும் செய்தி வெளியாகியது. இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க மனித உரிமைகள் சங்கம், சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புபடைக்கு புகார் அளித்தது.
அதனை தொடர்ந்து இந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க அமெரிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையர் கிறிஸ் மேக்னஸ் கூறியதாவது “சுங்கம் மற்றும் பாதுகாப்பு ரோந்துபடையினர் எல்லையில் பிடிபடும் அனைவரையும் சமமாகவே நடத்துகின்றனர். இதுபற்றி துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.